இந்தியா

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN


சீனர்களுக்கு விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

சீனர்களுக்கு விசா வழங்கியதில் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே, கார்த்தி சிதம்பரம் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கார்த்தி சிதம்பரம் சார்பாக கபில் சிபல், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரதீக் சத்தா ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடையாது, அவர் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு தருகிறார் என அவர்கள் வாதிட்டனர்.

இதன்பிறகு, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே. நக்பால் தீர்ப்பை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT