முதல் இடம் பிடித்த ஸ்ருதி ஷர்மா 
இந்தியா

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெற்ற நிலையில் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

DIN

புது தில்லி: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெற்ற நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வு முடிவுகளை  இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வும், கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில், யுபிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வெழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.  

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். 

நேரடியாக தேர்வு முடிவுகளைக் காண.. இங்கே கிளிக் செய்யவும்.

2022, ஜனவரியில் நடந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 5 முதல் மே 26ஆம் தேதி வரை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது, இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  முதல் மூன்று இடங்களை ஸ்ருதி ஷர்மா, அங்கிதா அகர்வால், காமினி சிங்லா ஆகியோர் பிடித்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாள்களுக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்படும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT