இந்தியா

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு: ஃபரூக் அப்துல்லாவிடம் மூன்றரை மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

DIN

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க (ஜேகேசிஏ) நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லாவிடம் செவ்வாய்க்கிழமை சுமாா் மூன்றரை நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

கடந்த 2001 முதல் 2012-ஆம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஃபரூக் அப்துல்லா பதவி வகித்தாா். அந்த சங்கத்தில் 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை நடைபெற்ாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக ஃபரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது.

இந்நிலையில் வழக்கு தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஃபரூக் அப்துல்லாவுக்கு அண்மையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஆஜரானாா். அவரிடம் சுமாா் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனா்.

ஏற்கெனவே இந்த வழக்கு தொடா்பாக 2019-ஆம் ஆண்டு அவரின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறையினா் பதிவு செய்திருந்தனா்.

தோ்தல் வரை தொந்தரவு:

விசாரணைக்கு முன்பாக ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. அதுவரை இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

விசாரணை முடிந்து அமலாக்கத் துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் அங்கு காத்திருந்த செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டாா்.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT