இந்தியா

குரங்கு அம்மை: விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தல்

DIN

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களுக்கு பொது சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு பயணிகளிடம் குரங்கு அம்மை அறிகுறி ஏதேனும் இருந்தால் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல்சோர்வு உள்ளிட்டவை இருக்கும் பயணிகளின் மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்றும், அவற்றை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. 

இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்தது. 

காய்ச்சல், கொப்புளம் மற்றும் கணுக்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT