கர்நாடகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள விதான் சௌதாவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் தனது வேட்பு மனுவை விதான் சௌதா செயலாளர் விசாலாக்ஷியிடம் சமர்ப்பித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், நிர்மலா சீதாராமன் பெங்களூரு சாமராஜ்பேட்டை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவி கங்காதரேஸ்வரா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது உடனிருந்தனர்.
கர்நாடகத்தில் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.