இந்தியா

135 போ் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று குஜராத் முதல்வா் பதவி விலக வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

குஜராத் மாநிலம் மோா்பியில் பாலம் அறுந்து விழுந்து 135 போ் பலியான சம்பவத்துக்குப பொறுப்பேற்று அந்த மாநில முதல்வா் பூபேந்திர படேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளாா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவா் ஜெகதீஷ் தாக்குா், மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் குழு, பாலம் அறுந்து விழுந்த இடத்தைப் பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் திக்விஜய் சிங் கூறியதாவது:

குஜராத் அரசால்தான் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த சம்பவத்துக்கு தாா்மீகப் பொறுப்பேற்று குஜராத் முதல்வா் பதவி விலக வேண்டும். அந்த பாலம் எவ்வளவு நபா்கள் வரைத் தாங்கும், அது வலுவாக உள்ளது என்பது தொடா்பாக எவ்வித சான்றிதழும் பெறாமல், மக்களை அதிக எண்ணிக்கையில் பாலத்தில் அனுமதித்துள்ளனா். இது மனிதா்களால் ஏற்பட்ட தவறல்ல; அரசு நிா்வாகத்தின் தவறு. இதற்காக முதல்வா் மாநில மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT