இந்தியா

கன்னடத்தில் பேசிய ரஜினிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்: கர்நாடக முதல்வர்

DIN

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ் குமார். அவர்  2021ஆம் ஆண்டு அக்.29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு

கர்நாடக அரசு, ‘கர்நாடக ரத்னா விருதி’னை வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருதினை வழங்க நடிகர் ரஜினிகாந்த் இன்று பெங்களூரு சென்றிருந்தார். 

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஜூனியர் என்.டி.ஆர்., ரஜினி ஆகியோர் ஒரே மேடையில் இருந்தனர். இந்த நிகழ்ச்சி விதான சௌதாவில் நடைப்பெற்றது. கொட்டும் மழையிலும் இந்த விருது விழாவிற்கு அதிக மக்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவில் கொட்டும் மழையிலும் ரஜினிகாந்த் கன்னடத்தில் உறையாற்றினார். இதில், “கன்னட மக்கள் அனைவரும் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாக, சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டுமென ராஜ ராஜேஸ்வரி, அல்லா, ஜீசஸ் உள்ளிட்ட அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்” எனப் பேசினார். 

இதனைப் பாராட்டி கர்நாடக முதல்வர், “கர்நாடக ரத்னா விருது வழங்க வந்தமைக்கும், கன்னட மக்களுக்காக கன்னடத்தில் பேசியமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT