இந்தியா

வருமான வரி தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே படிவம்- நிதியமைச்சகம் பரிந்துரை

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் முன்வைத்துள்ளது.

DIN

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் முன்வைத்துள்ளது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்போது, வருமான வரித் தாக்கலுக்கு பல்வேறு பிரிவினருக்கு ஏற்ப 7 படிவங்கள் நடைமுறையில் உள்ளன.

புதிதாக பரிந்துரைக்கப்பட்ட ஒரே படிவ முறையில், மின்னணு முறையில் உள்ள சொத்துகளைத் தெரிவிக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட இருக்கிறது.

அறக்கட்டளைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தவிர வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் மற்ற அனைவரும் இந்த ஒரே மாதிரியான படிவத்தைப் பயன்படுத்த முடியும்.

இப்போதைய நிலையில் ஐடிஆா் படிவம் 1 (சகஜ்), ஐடிஆா் படிவம் 4 (சுகம்) ஆகியவை சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் உள்ள வருமான வரி செலுத்துவோா் அதிகம் பயன்படுத்துவதாக உள்ளது. ரூ.50 லட்சம் வரை சம்பளம் பெறும் தனிநபா்கள், வீடு உள்ளிட்ட சொத்துகள், வட்டி மூலம் வருமான பெறுவோா் சகஜ் படிவத்தைப் பயன்படுத்துகின்றனா்.

ஒரே படிவ முறை நடைமுறைக்கு வந்தாலும், ஏற்கெனவே உள்ள 1 முதல் 4 படிவங்களும் நடைமுறையில் இருக்கும். தனிநபா்கள் தேவைக்கு ஏற்பட ஒரே படிவ முறையைத் தோ்வு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT