கோப்புப் படம் 
இந்தியா

மருத்துவ மாணவர் சேர்க்கை: உளவியல் பரிசோதனை கட்டாயம்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்போது அவர்களுக்கு உளவியல் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

DIN

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்போது அவர்களுக்கு உளவியல் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் திறனை மதிப்பிட்டு அவர்களுக்கு ஏற்ப கல்வி வழங்குவதற்காகவும், இடைநிற்றலை தடுப்பதற்காகவும் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹால்த்வானி பகுதியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பரிசோதனை மட்டுமே நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. அதோடு இஎன்டி, கண் பரிசோதனை, கதிரியக்க பரிசோதனை, நோயியல் பரிசோதனை உள்ளிட்டவை மட்டுமே செய்யப்பட்டது. 

ஆனால், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனையும் கட்டாயம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக டேராடூனில் பேசிய மருத்துவக் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர், உளவியல் பரிசோதனையின் மூலம் மாணவர்களின் நடத்தை, ஒழுக்கம், இயங்கும் திறன் உள்ளிட்டவை மதிப்பிடப்படுவதாகவும், அதன் அடிப்படியில் மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார். 

சில மாணவர்கள், குறித்த காலத்திற்குல் படிப்பை முடிக்காமல், 5 - 6 ஆண்டுகளாகவும் இளநிலை படிப்பை படித்து வருகின்றனர். சிலர் அதிக அழுத்தம் காரணமாக படிப்பை தொடர முடியாமல் சென்றுவிடுகின்றனர். இதனைத் தடுக்கும் பொருட்டு மாணவர்களுக்கு உளவியல் பரிசோதனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT