பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ராகுல் காந்தி!
நடைபயணத்தின்போது பழங்குடியின மக்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரகளின் பாரம்பரிய நடனமாடிய விடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடைபயணத்தின்போது பழங்குடியின மக்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவரகளின் பாரம்பரிய நடனமாடிய விடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது.
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைபயணமானது தமிழகத்தில் தொடங்கி கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்த தற்போது தெலங்கானாவில் நடைபெற்று வருகின்றது.
இன்று காலை நடைபயணம் மேற்கொண்ட போது, தெலங்கானா, ஆந்திரம், ஒடிசாவில் வாழும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய ‘திம்சா’ நடனத்தை அவர்களுடன் இணைந்து ஆடினார்.
இதையும் படிக்க | சென்னையில் செண்டை மேளம் வாசித்து அசத்திய மம்தா!
பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடிய காணொளி தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே கேரளத்தில் படகு போட்டி, நடைபயணத்தின்போது குழந்தைகளுடன் ஓடுவது, கால்பந்து விளையாடுவது என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறார்.