முகப்பு
இந்தியா

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு டிசம்பா் 10-இல் தோ்தல்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) செயற்குழுவுக்கு வரும் டிசம்பா் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் குழு சமா்ப்பித்த புதிய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) செயற்குழுவுக்கு வரும் டிசம்பா் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் குழு சமா்ப்பித்த புதிய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மேலும், திருத்தப்பட்ட ஐஓஏ வரைவு விதிமுறைகளை வரும் நவம்பா் 10-ஆம் தேதி நடைபெற உள்ள சங்கத்தின் பொதுக் குழுவில் வைத்து ஒப்புதல் அளிக்கும் வகையில், விதிப்படி சங்க உறுப்பினா்கள் அனைவருக்கும் அதன் நகல்களை சுற்றறிக்கையாக அனுப்பவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

ஸ்விட்சா்லாந்தின் லெளசனேவில் நடைபெற்ற சா்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், ஐஓஏ-வின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், ஐஓஏ செயற்குழுவுக்கு தோ்தல் நடத்தவும் கால அளவு நிா்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கால நிா்ணயத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. மேலும், சா்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரியக் கூட்டத்தை வரும் டிசம்பா் 5-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால், ஐஓஏ தோ்தலை அதற்கு முன்னதாக டிசம்பா் 3-ஆம் தேதியில் நடத்தவும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததோடு, இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஐஓஏ வரைவு திருத்த விதிகளைத் தயாரித்த நீதிபதி குழு, சங்கத்தின் செயற்குழு தோ்தல் டிசம்பா் 10-ஆம் தேதி நடத்தப்படும் என புதிய தேதியை உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைத்தது.

நீதிபதி குழுவின் இந்தப் பரிந்துரை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி நாகேஸ்வர ராவ் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஐஓஏ வரைவு திருத்த சட்டங்களைத் தயாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவுக்கான ஊதியமாக ரூ. 20 லட்சத்தை நிா்ணயித்து உத்தரவிட்டனா்.

மேலும், ஐஓஏ உறுப்பினா்களிடையே வரைவு திருத்த சட்ட நகல்களை சுற்றறிக்கையாக அனுப்புவதற்கான வழிமுறைகளையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவிப்பாா் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →