பொது நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கையில் குழந்தையுடன் வரலாமா? 
இந்தியா

பொது நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கையில் குழந்தையுடன் வரலாமா?

மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனியார் நிகழ்ச்சிகளுக்கு, தனது குழந்தையுடன் வந்து, கையில் குழந்தையை வைத்துக் கொண்டு உரையாற்றுவது சரியா? உங்களால் இதனை தீர்மானிக்க முடிகிறதா?

DIN

திருவனந்தபுரம்: மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனியார் நிகழ்ச்சிகளுக்கு, தனது குழந்தையுடன் வந்து, கையில் குழந்தையை வைத்துக் கொண்டு உரையாற்றுவது சரியா? உங்களால் இதனை தீர்மானிக்க முடிகிறதா?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர், தனது மூன்று வயது மகனை, தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்போது உடன் அழைத்து வருவதும், இடுப்பில் குழந்தையை உட்கார வைத்துக் கொண்டு, நிகழ்ச்சியில் பேசுவதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அவரது கணவர் உள்பட பலரும், திவ்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஒரு பெண் தனது பல்வேறு கடமைகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மிக முக்கிய தருணங்களில் அவர்களது குழந்தையுடன் உடன் இருப்பதும் அவசியமாகிறது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல என்றும் சிலர் கருதுகிறார்கள். அவர்களுக்கு, நியூ ஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா தனது மூன்று மாதக் குழந்தையுடன் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியதை நினைவூட்டி பச்சைக்கொடி அசைக்கிறார்கள்.

இது குறித்து அவர்து கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ். சபரிநாதன் கூறுகையில், அது வார விடுமுறைநாள், நிகழ்ச்சியோ முழுக்க முழுக்க தனியார் நடத்தும் நிகழ்ச்சி. அன்றைய தினம் அவர் தனது குழந்தையுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். 

இதற்கு பலரும், வார இறுதி நாள்களில்  அவர் எந்த தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது, குடும்பத்துடன் செலவிட வேண்டும் என்று கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ஆனால், பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுவந்தாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் திவ்யா எந்த கருத்தும் இதுவரைக் கூறவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT