குஜராத் தொங்கு பால விபத்து: மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி இடைநீக்கம்!
மோர்பி விபத்து விவகாரத்தில் நகராட்சியின் தலைமை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோர்பி விபத்து விவகாரத்தில் நகராட்சியின் தலைமை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநிலம் மோா்பி மாவட்டத்தில் உள்ள மச்சு நதி மீது இருந்த தொங்கு பாலம் பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல் அறுந்து விபத்து ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 135-ஆக அதிகரித்த நிலையில், சுமாா் 170 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
விபத்து நிகழ்ந்த பகுதியை ஹெலிகாப்டரில் இருந்தவாறு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட பிரதமா் மோடி, பின்னா் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
தொடர்ந்து மோா்பியில் விபத்து தொடா்பாக நடைபெற்ற உயா்நிலை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, விபத்துக்கான அனைத்துக் காரணங்களையும் கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்வது அவசியம் என்றார். இதனிடையே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் பாலச் சீரமைப்பு ஒப்பந்ததாரரான ஒரேவா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிக்க- மும்பையில் புறநகர் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கம்
இந்த நிலையில் மோர்பி விபத்து விவகாரத்தில் நகராட்சியின் தலைமை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மோர்பி நகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.