முகப்பு
இந்தியா

சிக்கிமில் குடியரசுத் தலைவர் முர்மு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக சிக்கிமுக்கு இன்று வந்தடைந்தார். 

Updated On : 4 நவம்பர், 2022 at 5:00 PM
திரெளபதி முர்மு
பகிர்:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக சிக்கிமுக்கு இன்று வந்தடைந்தார். 

லிபிங் ஹெலிபேடில் அவரை ஆளுநர் கங்கா பிரசாத், முதல்வர் பிரேம் சிங் தமாங் மற்றும் மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.

முர்மு இமயமலைக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு ராணுவ அதிகாரிகள் தக்க மரியாதை செலுத்தினர். பின்னர் மாநில தலைநகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். 

Advertisement

மேலும், இன்று மாலை மனன் கேந்திராவில் நடைபெறும் விழாவில் பல்வேறு மாநில மற்றும் மத்திய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.