இந்தியா

கேஜரிவால் தில்லியின் பகுதி நேர முதல்வராக இருக்கிறார்: பாஜக

DIN


புது தில்லி: தில்லியில் நிலவும் மிக மோசமான காற்றுமாசுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்துக்கே அதிக நேரம் செலவிடுவதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கடுமையாக விமரிசித்துள்ளது பாஜக. 

தில்லியில், பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா பேசுகையில், தில்லி முதல்வர், தலைநகருக்கு வெறும் இரண்டு மணி நேரம் தான் வருகிறார். இங்கு வந்து செய்தியாளர்களை சந்தித்துவிட்டு மீண்டும் குஜராத்துக்கே சென்று விடுகிறார். அவர் தில்லியின் பகுதிநேர முதல்வராக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லிக்கு நேரம் ஒதுக்க கேஜரிவாலால் முடியவில் என்றால், தலைநகர் தில்லிக்கு முழு நேர முதல்வர் ஒருவரை நியமிக்கலாம். கேஜரிவாலுக்கு 53 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யலாம் என்றும் குரானா கூறியுள்ளார்.

தில்லியே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தில்லி முதல்வரோ இதர மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

SCROLL FOR NEXT