இந்தியா

ஹிமாச்சலில் 26 காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் உள்ளிட்ட 26 காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் உள்ளிட்ட 26 காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

பாஜகவில் இணைந்த பெரும்பாலான தலைவர்கள் சிம்லா தொகுதியை சேர்ந்தவர்கள் ஆவார். 

காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரும்பாலான தலைவர்கள் ஹர்ஷ் மகாஜனுக்கு விசுவாசமாக இருந்தனர். அவர் செப்.28ல் காங்கிரசை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். 

பாஜகவில் இணைந்த அனைவருக்கும் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அன்பான வரவேற்பு அளித்துள்ளார். கட்சியின் வரலாற்று வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார். 

ஹிமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

ஹரியாணா ஐஜி தற்கொலை: டிஜிபி-க்கு கட்டாய விடுப்பு!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

SCROLL FOR NEXT