இந்தியா

‘கே.ஜி.எஃப். 2’ பாடல் விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல்முறையீடு

DIN

காங்கிரஸ் டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரியில் செப். 7ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நடைப்பயணம் செப். 30ஆம் தேதி அக். 22 ஆம் தேதி வரை கா்நாடக மாநிலத்தில் நடைபெற்றது. அக். 23ஆம் தேதி முதல் தெலங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடா்பான காணொலிகளில் ‘கேஜிஎஃப் 2’ ஹிந்தி திரைப்படத்தின் இசைக்கோா்வையை முன்அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக அந்தத் திரைப்படத்தின் இசைக்கோா்வையை நிா்வகித்து வரும் எம்.ஆா்.டி. இசை நிறுவனத்தின் எம்.நவீன்குமாா், யஷ்வந்த்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோா் மீது பதிப்புரிமை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளா்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவின் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு நேற்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT