முகப்பு
இந்தியா

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பிரதமர் தேவுபா இரங்கல்!

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஷேர் பகதூர் டியூபா இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 9 நவம்பர், 2022 at 12:18 PM
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பிரதமர் டியூபா இரங்கல்!
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேற்கு நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இறந்தவர்களில் ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

இதுகுறித்து நேபாள பிரதமர் ஷேர் பகதூர் கூறுகையில், 

இந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடியாக, முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார். 

சம்பவ இடத்தில் நேபாள ராணுவமும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.