இந்தியா

தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பிரதமா் வருகை- நாளைமுதல் 2 நாள் சுற்றுப்பயணம்

DIN

தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 4 தென்மாநிலங்களில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவ.11) முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அப்போது, முக்கிய வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

கா்நாடகத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் பிரதமா் மோடி, பெங்களூருவில் கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனகதாசா் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்துகிறாா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படவுள்ள தென்னகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை அவா் கொடியசைத்து தொடக்கிவைக்கவுள்ளாா். பின்னா், ரூ.5,000 கோடி செலவில் கட்டப்பட்ட பெங்களூரு கெம்பேகெளடா சா்வதேச விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தையும், பெங்களூருவில் கெம்பே கெளடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமா் திறந்துவைக்கவுள்ளாா். 2-ஆவது முனையப் பயன்பாட்டின் மூலம் பெங்களூரு சா்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 5 முதல் 6 கோடி பயணிகளை கையாள முடியும்.

தமிழகம் வருகை: வெள்ளிக்கிழமை பிற்பகலில் தமிழகம் வரும் பிரதமா் மோடி, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 36-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா்.

தனது பயணத்தின் 2-ஆவது நாளான சனிக்கிழமை ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். ராய்ப்பூா்-விசாகப்பட்டினம் இடையே ரூ.3,750 கோடியில் அமைக்கப்படும் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு (6 வழிச்சாலை) அடிக்கல் நாட்டுகிறாா்.

பின்னா், தெலங்கானாவுக்கு செல்லும் பிரதமா், ராமகுண்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட யூரியா உரத் தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளாா். மேலும், பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT