முகப்பு
இந்தியா

காற்று மாசினால் விடுமுறை: தில்லியில் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

தில்லியில் காற்று மாசு காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில், 1 முதல் 5 வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

Updated On : 9 நவம்பர், 2022 at 11:29 AM
பகிர்:

தில்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

தலைநகர் தில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொடக்கப்பள்ளிகள் மட்டும் இன்று திறக்கப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். 

Advertisement

அதன்படி, இன்று தில்லியில் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 

கடந்த வாரம் தில்லியில் காற்று மாசு 'கடுமை' பிரிவில் இருந்தது. தற்போது 'மிகவும் மோசம்' பிரிவில் (காற்றின் தரம் 329 புள்ளிகள்) உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தில்லியில் காற்று மாசு காரணமாக குழந்தைகள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பள்ளி திறந்ததால், குழந்தைகள் காற்று மாசினால் பாதிக்காத வண்ணம், போதுமான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.