மல்லுகார்ஜுன கார்கே 
இந்தியா

7 ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது? காங்கிரஸ் தலைவர் கேள்வி

7 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக என்ன செய்துள்ளது என ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

7 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக என்ன செய்துள்ளது என ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் புதன்கிழமை ஹிமாச்சலப்பிரதேசம் பானுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். 

அப்போத் அவர், “நான் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவரானேன். ஆனால் பாஜகவில் ஜே.பி.நட்டா தலைவராக எப்படி நியமிக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை” என கூறி வருகின்றனர். 

“நாட்டிற்காக காங்கிரஸ் 70 ஆண்டு காலம் என்ன செய்தது என பாஜக ஒரே ஒரு முழக்கத்தை திரும்பத் திரும்ப கூறி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சாலை வசதிகள், கல்வி நிலையங்கள், மின்சார வசதி ஆகியவை ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு கிடைத்தது. அவர்கள் 7 ஆண்டுகளில் என்ன வளர்ச்சியை ஏற்படுத்தினார்கள்” எனக் கேள்வி எழுப்பினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT