கோப்புப்படம் 
இந்தியா

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு?

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தமிழக காவல்துறை நடத்திய சோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

DIN



சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தமிழக காவல்துறை நடத்திய சோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி, சென்னை மண்ணடியில் காவல்துறை சோதனை நடத்தி வருகிறது. மண்ணடியைத் தொடர்ந்து சென்னை புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா உள்பட நகர் முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதில், சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கொண்டு மக்களுடன் மக்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.  பங்கரவாத அமைப்பினருடன் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளிலும் தமிழக காவல் துறையின் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், கோவை  உக்கடம் கார் வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!

லூடோ காதலி... கீர்த்தி சுரேஷ்!

SCROLL FOR NEXT