இந்தியா

பெங்களூருவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

DIN

பெங்களூரு வந்துள்ள பிரதமர் மோடிக்கு அவரது கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் பாரத் கெரவ் காசி தர்ஷன் ஆகிய ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கிவைப்பதற்காக, கிராந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். 

பெங்களூருவில் உள்ள முக்கிய போக்குவரத்து சந்திப்பிலும், கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகம் அருகேயும், கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் உற்சாகமான மக்களை நோக்கி பிரதமர் மோடி கை அசைத்தார். 

தனது கார் செல்லும் வழிநெடுக நின்றுகொண்டிருந்த கூட்டத்தை மோடி வரவேற்றார். அங்கு பலர் மோடி மோடி என கோஷம் எழுப்பியும், பாஜக கொடிகளை உயர்த்தியும் காட்டினார்கள். 

பின்னர், கெட்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-2 திறப்பு விழாவுக்குச் சென்ற மோடி, கே.எஸ்.ஆர் ரயில் நிலையம் அருகே உள்ள முக்கிய போக்குவரத்துச் சந்திப்பில் வாகனத்தில் இருந்து இறங்கி, முழு பாதுகாப்புடன் கூட்டத்தை நோக்கி நடந்து சென்றார். 

600 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை நிறுவிய விஜயநகரப் பேரரசின் தலைவரான 'நடபிரபு' கெம்பேகௌடாவின் 108 அடி உயர சிலையைத் திறந்து வைப்பதற்கும், விமான நிலையத்தின் டெர்மினல்-2ஐ  திறந்து வைப்பதற்கும் பிரதமர் பெங்களூருவுக்கு வந்துள்ளார். 

கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், மோடியின் பெங்களூரு பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT