இந்திய மாமியாருடன் வெங்காயம் நடும் ஜெர்மன் மருமகள்: வைரல் விடியோ 
இந்தியா

இந்திய மாமியாருடன் வெங்காயம் நடும் ஜெர்மன் மருமகள்: வைரல் விடியோ

தனது இந்திய மாமியாருடன் இணைந்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், வயல் வெளியில் வெங்காயம் நடும் விடியோ வைரலாகி வருகிறது.

DIN

தனது இந்திய மாமியாருடன் இணைந்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், வயல் வெளியில் வெங்காயம் நடும் விடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாகவே வெளிநாட்டினருக்கு இந்திய பழக்க வழக்கங்களும் கலாச்சரமும் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அண்மையில், வெளிநாட்டு பெண்களும் ஆண்களும் இந்தியர்களை மணமுடிக்கும் தகவல்கள் அதிகம் வெளியாகி வருகிறது என்று கூடச் சொல்லலாம்.

அது போல, இந்திய பழக்க வழக்கங்களை, உணவு முறைகளை வெளிநாட்டினர் செய்வது, சமைத்துப் பார்ப்பது போன்ற விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையல் இதுபோன்ற ஒரு விடியோதான் அதிகம் வைரலாகியிருக்கிறது. அதாவது, ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் வசித்து வருகிறார்.

இன்ஸ்டகிராமில், ஜூலி ஷர்மா என்பவர் தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இந்த விடியோவில், பிங்க் நிற உடையில், அழகாக நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு, வயல்வெளியில் தனது மாமியாருடன் சேர்ந்து வெங்காயம் புதைத்துக் கொண்டிருக்கிறார். 

இந்த விடியோவை எடுக்கும் அந்த பெண்ணின் கணவர், உன்னை ஒன்று கேட்கலாமா? என்கிறார். அதற்கு அப்பெண்ணும் முகம் மலர்ந்தபடி சரி என்கிறார்.

நீ எங்கிருந்து வருகிறாய்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கணவர் கேட்க, அதற்கு அவர், தான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன், மாமியாருடன் இணைந்து வெங்காயத்தை நடவு செய்து கொண்டிருக்கிறன் என்கிறார்.

அந்த விடியோவில், மிக எளிமையான வாழ்க்கையில், குடும்பத்துடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த விடியோ, அதிகம் பேரால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. பலரும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT