இந்தியா

பிலாஸ்பூரில் தனது வாக்கைப் பதிவு செய்தார் ஜெ.பி.நட்டா! 

ANI

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிலாஸ்பூரில் உள்ள விஜப்பூரில் வாக்களித்தார். 

வாக்களித்த பின்னர் நட்டா கூறுகையில், 

ஹிமாச்சலில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

மக்களுக்கு வைராக்கியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த வைராக்கியம் ஏதோவொன்றின் மீது உள்ளது. மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

நட்டாவின் மனைவி மல்லிகா நட்டாவுக்கு அவருடன் சேர்ந்து வாக்களித்தார். 

பாஜக கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவின் வீடு பிலாஸ்பூரில் உள்ளதால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு முக்கியமானது. 

68 தொகுதிகள் கொண்ட ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரேகட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. 

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT