இந்தியா

ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பிரான்ஸ் பயணம்!

DIN


ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நான்கு நாள் அரசு முறை பயணமாக திங்கள்கிழமை(நவ.14) பிரான்ஸ் செல்கிறார். நான்கு நாள் பயணத்தின் போது, ​​இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு ராணுவ தளபதிகளையும், மூத்த ராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். 

பயணத்தின் போது, முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த 4,742 இந்திய வீரர்களின் நினைவாக நியூவே சாப்பெல் இந்திய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பிரான்ஸ் பாதுகாப்பு தலைமைத் தளபதி, ராணுவ தளபதி உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளைச் சந்தித்திக்கும் மனோஜ் பாண்டே, இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கிறார். 

பாரிஸில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி நிலையங்களுக்கு செல்லும் மனோஜ் பாண்டே, டிராகுயிக்னான் ராணுவ பள்ளியையும் பார்வையிடுகிறார். 

தலைமைத் தளபதியின் இந்தப்பயணம், இரு நாட்டு ராணவங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லுறவு நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிளாக் எடிசன் பைக் அறிமுகம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

யார் யாரோ மயங்கினரோ! த்ரிப்தி திம்ரி..

SCROLL FOR NEXT