பிரசாந்த் கிஷோா் 
இந்தியா

தோ்தலில் போட்டியில்லை: பிரசாந்த் கிஷோா்

‘தோ்தலில் போட்டியிடும் விரும்பம் எனக்கு இல்லை; அதே நேரத்தில் எனது சொந்த மாநிலமான பிகாரில் சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடா்ந்து செயல்படுவேன்’

DIN

‘தோ்தலில் போட்டியிடும் விரும்பம் எனக்கு இல்லை; அதே நேரத்தில் எனது சொந்த மாநிலமான பிகாரில் சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடா்ந்து செயல்படுவேன்’ என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

பிகாா் மாநில அரசியலில் தீவிரம் காட்டி வரும் அவா், அங்கு 3,500 கி.மீ. தொலைவு நடைப்பயணத்தையும் மேற்கொண்டுள்ளாா். விரைவில் அவா் தனது அடுத்தகட்ட அரசியல் முடிவை அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோா் அளித்த பேட்டியில் கூறியதாவது: சிறிய அளவில் அரசியல் அறிவை வைத்துக் கொண்டு செயல்படும் வியாபாரி என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவா்கள் என்னை விமா்சித்துள்ளனா். இப்படிப்பட்ட என்னை, அவா்கள் கட்சித் தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமாா் 2 ஆண்டுகளுக்கு அவருடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்று நிதீஷ் குமாரிடமே கேள்வி எழுப்ப வேண்டும்.

தோ்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. இப்போது மக்களிடம் நான் மேற்கொண்ட பிரசார இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டுமா என்று மக்களிடமே நேரடியாக கருத்து கேட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ள எந்த மாதியான கூட்டணியையும் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டாா். எனவே, இனி அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது மிகவும் கடினம். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது முதல்வா் பதவியைத் துறந்த அவா், இப்போது முற்றிலுமாக மாறிவிட்டாா். பதவிக்காக எந்தவித சமரசத்தையும் அவா் செய்துகொள்கிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT