இந்தியா

ரயில் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் சடலம்! பயணிகள் அதிர்ச்சி

பஞ்சாப் ரயில் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பஞ்சாப் ரயில் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்ட நேரமாக கேட்பாறின்றி ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் இருப்பதாக காவல்துறைக்கு இன்று காலை 7 மணிக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர் திறந்து பார்த்ததில், அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், ஒருவர் சூட்கேஸை விட்டுச் சென்றது பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடையாளம் தெரியாத சடலம் குறித்தும், சூட்கேஸின் அடைத்து விட்டுச் சென்ற நபர் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஜாலந்தர் முழுவதும் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் நிலைய வளாகத்தில் பகல் நேரத்திலேயே சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடைமழையால் கடும் வெள்ளம்! அடித்துச்செல்லப்பட்ட கார்கள்!

சேட்டன் ஆன் தி வே... சௌபின் சாஹிர்!

ப்ளாக் அண்ட் பியூட்டி... ரகுல் ப்ரீத் சிங்!

கரூர் விவகாரம்: “விசாரணை குறித்து எதுவும் கூற முடியாது!” -ஐஜி அஸ்ரா கார்க்

பட்டாசுக் கடையில் தீவிபத்து! விரைந்த தீயணைப்பு வீரர்கள்! | Sivakasi | Fire

SCROLL FOR NEXT