இந்தியா

பலாத்கார குற்றவாளிகளைப் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும்: ம.பி. அமைச்சர்

பாலியல் பலாத்கார குற்றவாளிகளைப் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று மத்தியப் பிரதேச கலாசார அமைச்சர்  உஷா தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார். 

DIN


பாலியல் பலாத்கார குற்றவாளிகளைப் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று மத்தியப் பிரதேச கலாசார அமைச்சர்  உஷா தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார். 

திங்கள் இரவு இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் தெஹ்சில் கோடாரியா கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாக்கூர் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், 

மோவ் எம்எல்ஏவின் கருத்துகளின் விடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது.

மகள்களைப் பலாத்காரம் செய்பவர்களை பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும். அத்தகைய நபர்களின் இறுதிச் சடங்குகள் நடத்தக்கூட அனுமதிக்கப்படக்கூடாது.

அப்படிப்பட்டவரின் உடலை கழுகுகளும், காகங்களும் கொத்திக் கிழிக்கட்டும். 

இந்தக் காட்சியைக் காணும் யாரும் மகள்களைத் தொடத் துணிய மாட்டார்கள். இதுபோன்ற விஷயங்கள் அதிகபட்ச மக்களைச் சென்றடைய வேண்டும். இது சமூகத்தின் நலனுக்காகத்தான் என்றார். 

பாலியல் குற்றத்தைப் பகிரங்கமாகச் செய்கிறார்கள், அதற்காக சிறையில் தண்டனையும் அனுபவிக்கிறார்கள், ஆனால் அதற்காக அவர்கள் மத்தியில் எந்த பயமும் இல்லை . 

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்த முன்வர வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

SCROLL FOR NEXT