இந்தியா

நகை கொள்ளை வழக்கு: மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக்குக்கு எதிராக கைது ஆணை

DIN

நகை கொள்ளை வழக்கு தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் நிசித் பிரமாணிக்கை கைது செய்ய மேற்கு வங்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் அலிபுா்துவாா் ரயில் நிலையம் அருகிலும், பிா்பாரா பகுதியிலும் உள்ள தங்க நகைக் கடைகளில் நிசித் பிரமாணிக் உள்பட பலா் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்தனா். கடந்த 2019-ஆம் ஆண்டு நிசித் பிரமாணிக் எம்.பி.யான பின்னா், இந்த வழக்கு வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கு அலிபுா்துவாரில் உள்ள நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நிசித் பிரமாணிக், அவா் சாா்பாக வாதிட வழக்குரைஞா் என எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நிசித் பிரமாணிக்குக்கு எதிராக நீதிபதி கைது ஆணை பிறப்பித்தாா். இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிச.7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT