நகைக் கடை திருட்டு வழக்கில் மத்திய இணையமைச்சருக்கு பிடி வாரண்ட் 
இந்தியா

நகைக் கடை திருட்டு வழக்கில் மத்திய இணையமைச்சருக்கு பிடி வாரண்ட்

மத்திய இணை அமைச்சர் நிதீஷ் பிரமாணிக்கை கைது செய்யுமாறு வடக்கு வங்கத்தின் அலிபுர்தௌர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

DIN


ஜல்பைகுரி: இரண்டு நகைக் கடைகளில் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நகைத் திருட்டு வழக்கில் மத்திய இணை அமைச்சர் நிதீஷ் பிரமாணிக்கை கைது செய்யுமாறு வடக்கு வங்கத்தின் அலிபுர்தௌர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் வழக்கு விசாரணைக்கு நிதீஷ் பிரமாணிக் நேரில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

நிதீஷ் பிரமாணிக்குக்கு எதிரான இரண்டு வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. வெள்ளிக்கிழமை வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, நிதீஷ் பிரமாணிக்கோ அவரது தரப்பில் வழக்குரைஞரோ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்று மூத்த வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

அவரை அடுத்த விசாரணை நடைபெறும் டிசம்பர் 7ஆம் தேதி காவல்துறையினர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பிடிவாரண்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT