இனி தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்யலாம்: இந்திய ரயில்வே அறிவிப்பு!
ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஆர்சிடிசி இன் தற்போதைய உணவு வழங்கல் மெனுவில் முதன்மையாக ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களான சப்பாத்தி, இட்லி, பிரியாணி போன்ற குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் பானங்கள் மட்டும் ரயில்களில் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | டிக்கெட் பரிசோதகரால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டத்தில் 2 கால்களையும் இழந்த ராணுவ வீரர்!
Advertisement
இந்நிலையில், ரயில் பயணிகள் தங்களுக்கு பிடித்தமான உள்ளூர் உணவு வகைகள் மற்றும் பருவகால உணவுகள், நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளும்படி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.