இந்தியா

அருணாசலில் முதல் விமான நிலையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

DIN


அருணாச்சலப் பிரதேச தலைநகர் இட்டாநகரில் முதல் பசுமை விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 

இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. டோனி என்றால் சூரியன் என்றும் போலோ என்றால் சந்திரன் என்றும் குறிப்பிடப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஹோலோங்கியில் பசுமை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். 

அருணாசலில் திறக்கப்பட்ட முதல் பசுமை விமான நிலையத்தின் கட்டுமானப் பணி 2020 டிசம்பரில் தொடங்கியது. ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT