இந்தியா

அருணாசலில் முதல் விமான நிலையத்தை இன்று திறந்துவைக்கிறார் மோடி!

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட டோன்யி போலா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். 

DIN

புது தில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட டோன்யி போலா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். 

2019 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி ஹோலோங்கியில் பசுமை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தேசு விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்.

ஹோலோங்கியில் உள்ள முனையம் சுமார் 955 கோடி ரூபாய் செலவில் 4100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 200 பயணிகளை கையாளும் திறன் கொண்டது. 

அருணாசலில் முதல் பசுமை விமான நிலையமான இந்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணி 2020 டிசம்பரில் தொடங்கியது. ரூ.640 கோடி செலவில் 690 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்துக்கு டோனி போலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள 600 மெகாவாட்ஸ் காமெங் கீர் மீன் நிலையத்தையும் திறந்து வைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடுதலாக 300 தனியாா் பேருந்துகளை இயக்கத் திட்டம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 321 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம் ஸ்ரீராஜகுபேரா் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

புனல்குளம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT