கோப்புப்படம் 
இந்தியா

நாகாலாந்து: சிறைக் கதவை உடைத்து 9 கைதிகள் தப்பியோட்டம்

நாகாலாந்தில் 9 சிறைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நாகாலாந்தில் 9 சிறைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து நேற்று கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். தப்பியோடிய 9 கைதிகளில் இரண்டு பேர் தண்டனை பெற்றவர்கள் மற்றும் 7 பேர் விசாரணைக் கைதிகள் ஆவர். சிறையில் இருந்து இரும்பு கதவு மற்றும் கைவிலங்கு பூட்டு சங்கிலியை உடைத்துக்கொண்டு அவர்கள் தப்பினர். 

இதையடுத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து மோன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி அபோங் யிம் கூறுகையில், சனிக்கிழமை அதிகாலையில் மோன் மாவட்ட சிறைச்சாலையின் 9 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. 9 சிறைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் நாகாலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு வீசி ரெளடி கொலை முயற்சி: ஒருவர் என்கவுன்டர்!

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

SCROLL FOR NEXT