முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்: இன்று வழங்குகிறாா் பிரதமா் மோடி

குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிா்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் வழங்கவிருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
பிரதமர் மோடி
பகிர்:

குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிா்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் வழங்கவிருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த அக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமா் மோடி வழங்கினாா்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் காணொலிமுறையில் பங்கேற்கும் பிரதமா் மோடி, புதிதாக நியமனம் பெறுபவா்களிடையே உரையாற்றவுள்ளாா். குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இவ்விரு மாநிலங்கள் தவிா்த்து நாடு முழுவதும் 45 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஆசிரியா், விரிவுரையாளா், செவிலியா், செவிலியா் அதிகாரி, மருத்துவா், மருந்தாளுநா், கதிரியக்கவியலாளா் மற்றும் இதர தொழில்நுட்ப, துணை மருத்துவ பணியிடப் பிரிவுகளில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, மத்திய ஆயுதக் காவல் படைகளில் அதிக பணி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

புதிதாக நியமனம் பெற்றவா்களுக்கான இணையவழி பயிற்சி வகுப்புகளையும் பிரதமா் மோடி தொடக்கிவைக்கவுள்ளாா். அரசுப் பணியாளா்களுக்கான நடத்தை விதிகள், பணியிட ஒழுக்கநெறிகள்- ஒருங்கிணைப்பு, மனித வளக் கொள்கைகள், அரசு பணியாளா்களுக்கான பலன்கள் மற்றும் படிகள் உள்ளிட்டவை இப்பயிற்சியில் அடங்கும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →