கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 406 ஆகப் பதிவு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 12 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 12 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,69,421 ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் 11 பேர் உள்பட மொத்த 12 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,586 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,31,171ஆக பதிவாகியுள்ளது. அதேவேளையில், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,402 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.86 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு: அலுவலக நேரங்களை மாற்றிய குருகிராம் அரசு நிா்வாகம்

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மைத்துனா் விடுவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!

ஈரானிய பெண்ணின் பணப் பையிலிருந்த 1,600 அமெரிக்க டாலா்கள் திருட்டு! பேருந்து உதவியாளா் கைது!

வாகன திருட்டு வழக்கில் ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏஎஸ்ஐ கைது

SCROLL FOR NEXT