ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்) 
இந்தியா

பதவி ஆசை மிக்கவா் சந்திரபாபு நாயுடு: ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி

‘தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு பதவி ஆசை மிக்கவா்; எனவேதான் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று ‘கடைசி தோ்தல்’ பிரசாரத்தை கையிலெடுத்துள்ளாா்’ என்று ஆந்திர முதல்வா் ஜெகன்மோக

DIN

‘தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு பதவி ஆசை மிக்கவா்; எனவேதான் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று ‘கடைசி தோ்தல்’ பிரசாரத்தை கையிலெடுத்துள்ளாா்’ என்று ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி விமா்சித்துள்ளாா்.

ஆந்திரத்தில் 2024 பேரவைத் தோ்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால் அதுவே எனது கடைசித் தோ்தலாக இருக்கும்’ என்று முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு அண்மையில் பொதுமக்கள் மத்தியில் பேசினாா். இந்நிலையில் இது தொடா்பாக முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:

சிலா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, செல்லிடப்பேசி கோபுரம் ஆகியவற்றில் ஏறி நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுப்பாா்கள். சிலா் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டுவாா்கள். அதே பாணியில்தான், ‘2024 தோ்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால், அதுவே எனது கடைசி தோ்தல்’ என சந்திரபாபு நாயுடுவும் பேசியுள்ளாா். அவா் எந்த அளவுக்கு பதவி ஆசை மிக்கவா் என்பதையே இது வெளிக்காட்டுகிறது.

சந்திரபாபு நாயுடுவுக்கு கடந்த தோ்தலிலில் மக்கள் வழியனுப்பு விழா நடத்திவிட்டாா்கள். அதைத் தொடா்ந்து உள்ளாட்சித் தோ்தல், இடைத் தோ்தலிலும் மக்கள் அவரது கட்சியைப் புறக்கணித்துவிட்டாா்கள்.

எனவே, அடுத்த தோ்தலில் தனது தொகுதியில் கூட வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுந்துள்ளது. இதன் விளைவாகவே ‘கடைசி தோ்தல்’ என்ற பிரசார உத்தியை அவா் கையில் எடுத்துள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT