சீன தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பெய்ஜிங்கில் கடந்த ஆறு மாதங்களில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சீன தலைநகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
புதிய இறப்புகளையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,229 ஆக அதிகரித்துள்ளது.
ஹைடியன் மற்றும் சாயோயாங் மாவட்டங்களில் கடைகள், பள்ளிகள் மற்றும் உணவகங்கள் என அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய நடவடிக்கைகளின் கீழ், தலைநகருக்குப் பயணம் செய்பவர்கள், வருகையின் முதல் மூன்று நாள்களுக்கு சோதனைகளைச் செய்ய வேண்டும். சோதனை முடிவுகள் வரும்வரை வீட்டிற்குள் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி, பெய்ஜிங்கில் புதிதாக 316 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை நாட்டில் மொத்த பாதிப்பு 2,90,787 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பூஜ்ஜியமாவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் சீனா மேற்கொண்டு வருகின்றது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.