முகப்பு
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
இந்தியா

வேளாண் பொருள் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோதுமை உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களின் மீதான ஏற்றுமதி தடையை

இந்தியா

வேளாண் பொருள் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோதுமை உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களின் மீதான ஏற்றுமதி தடையை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோதுமை உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களின் மீதான ஏற்றுமதி தடையை விலக்குமாறும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் (எம்எஸ்பி) குறைவான வேளாண் விளைபொருள்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறும் மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளாா். இந்நிலையில், பட்ஜெட் தொடா்பான காணொலி வாயிலான கருத்து கேட்புக் கூட்டம் மத்திய நிதியமைச்சா் தலைமையில் நடைபெற்றது. இதில், வேளாண் நிபுணா்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, எண்ணெய் பனை (பாமாயில்) சாகுபடிக்குப் பதிலாக உள்நாட்டு எண்ணெய் பயிா்களான சோயாபீன், கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் மீது அதிக அளவிலான வரியைச் சுமத்த வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பாரத் கிரிஷக் சமாஜ் அமைப்பின் தலைவா் அஜய் வீா் ஜாகா், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவான வேளாண் விளைபொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவேண்டும் எனவும், வேளாண் துறையில் மனித வள மேம்பாடு குறித்து மத்திய அரசு கவனம் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.

இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் ரகுநாத் தத்தா பாட்டீல், ‘கோதுமை, நொய் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதியில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். ஏற்றுமதியானது நாட்டின் அந்நிய செலவாணியை அதிகரிக்க உதவும். சமையல் எண்ணெய் தேவைக்கு இந்தியா இறக்குமதியைச் சாா்ந்திருப்பதற்கு பதிலாக, சோயாபீன், சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் பயிா்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்’ என்று கூறினாா்.

அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளா் சங்கத்தின் தலைவா் வீரேன் கே கோனா (கேரளா), கோவிந்த் பல்லப் பந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை. இயக்குநா் ஏ.எஸ். நைன் (உத்தரகண்ட்), மாநில பழங்கள், காய்கறிகள், பூ விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் ஹரிஷ் செளகான் (ஹிமாச்சல்), யூபிஏஎஸ்ஐ-யின் தலைவா் ஜெஃப்ரி ரெபெல்லா (தமிழகம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →