இந்தியா

ஒடிஸா: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 19 ரயில்கள் ரத்து

DIN

ஒடிஸா சரக்கு ரயில் தடம்புரண்ட விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ஒடிஸாவின் ஜாஜ்பூா் மாவட்டத்தில் உள்ள கோரய் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை சரக்கு ரயில் தடம்புரண்ட விபத்தில், அங்கு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த 3 பெண்கள் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

கோரய் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை 6.44 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. காலி பெட்டிகளுடன் சத்ரபூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டது. இதில், 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி சிதறின.

ரயில் நடைமேடை மற்றும் காத்திருப்பு அறை மீது பெட்டிகள் விழுந்து இடித்து தள்ளியதில், அங்கு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தவா்கள் சிக்கினா். இந்த கோர விபத்தில், 3 பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இறந்தவா்களில் 2 பெண்கள் தாய்-மகள் ஆவா். அவா்களுடன் இருந்த இரண்டரை வயது குழந்தை அதிருஷ்டவசமாக உயிா் தப்பியது.

சென்னை-ஹெளரா ரயில் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன்,  20 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளதாக  இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT