அந்நியன் பாணியில்.. அதிரடிப் படை காவலர் - பிக்பாக்கெட் கும்பல் தலைவன் 
இந்தியா

அந்நியன் பாணியில்.. அதிரடிப் படை காவலர் - பிக்பாக்கெட் கும்பல் தலைவன்

காவல்துறை - திருடர்களுக்கு இடையே இருக்கும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர்.

DIN


ஹைதராபாத்: காவல்துறை - திருடர்களுக்கு இடையே இருக்கும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர்.

3 சிறார்கள் உள்பட செல்லிடப்பேசி திருடர்கள், 9 பிக்பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு அதன் தலைவனாக செயல்பட்டுள்ளார் அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்கிற ஈஸ்வர் பிரசாத் (35).

செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக் கொண்டனர்.

சிறுவர்களை தவறாக வழிநடத்தி திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும் புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிக்பாக்கெட் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை வைத்துக் கொண்டு, ஹைதராபாத், நல்கொண்டா, சூர்யாபெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈஸ்வர் செல்லிடப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருட்டுக் கும்பல் திருடிக் கொண்டு வரும் செல்லிடப்பேசிகளை ஈஸ்வர் எடுத்துக் கொண்டு, அதனை விற்று அதில் வரும் லாபத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், திருடர்கள் மாட்டிக் கொண்டால் தான் உதவுவதாகவும் ஈஸ்வர் கூறியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT