இந்தியா

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 22 பேர் காயம்!

DIN

மேற்கு துருக்கியில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 22 பேர் காயமடைந்தனர். 

தேசிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, 

டூஸ் நகருக்கு அருகே 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 22 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் கோலியாகா மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது மற்றும் அதிகாலை 4.08 மணிக்கு தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

6.81 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் தலைநகர் அங்காராவிலும் உணரப்பட்டது. இஸ்தான்புல்லில் இருந்து 210கிமீ தொலைவிலும், அங்காராவிலிருந்து 236கிமீ தொலைவிலும் டூஸ் அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மொத்தம் 18 அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்வெட்டு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா கூறுகையில், 

காயமடைந்த ஒருவர் உயரத்திலிருந்து குதித்ததால் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தேசிய மருத்துவ மீட்புக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலநடுக்கத்தை முன்னிட்டு இன்றைய தினம் பள்ளிகளை மூடப்படுவதாக அந்நாட்டு ஆளுநர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT