மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சிவி ஆனந்த போஸ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, மற்ற மாநில அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பிமன் பானர்ஜி முன்னிலையில் அவருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
1977ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான போஸ், நவம்பர் 17ஆம் தேதி மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
லா.கணேசன் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, அவருக்குப் பதிலாக போஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
போஸ் 2011இல் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் நிர்வாகியாக பணியாற்றினார்.என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.