முகப்பு
இந்தியா

அசாமில் பயங்கர தீ விபத்து! 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் லஹோரிஜன் பகுதியில் இன்று (புதன்கிழமை) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 23 நவம்பர், 2022 at 5:42 PM
பகிர்:

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் லஹோரிஜன் பகுதியில் இன்று (புதன்கிழமை) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அசாம் - நாகலாந்து எல்லையில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 100 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. 

விபத்து நடந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

Advertisement

இந்த தீ விபத்தில் அருகில் இருந்த குடிசைகள் எரிந்து நாசமானதாகவும் தீயை விரைந்து அணைத்துவிட்டதாகவும் கர்பி அங்லாங்கின் காவல் கண்காணிப்பாளர் சஞ்சிப் குமார் சைகியா கூறினார்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.