'ஷ்ரத்தா காப்பாற்றப்பட்டிருக்கலாம்..' தேவேந்திர ஃபட்னவீஸ் 
இந்தியா

'ஷ்ரத்தா காப்பாற்றப்பட்டிருக்கலாம்..' தேவேந்திர ஃபட்னவீஸ்

2020ஆம் ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் அளித்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிவதற்கான விசாரணை தொடங்கியிருப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

PTI

மும்பை: 2020ஆம் ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் அளித்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிவதற்கான விசாரணை தொடங்கியிருப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

புகார் கொடுக்கப்பட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் ஷ்ரத்தா வாக்கார் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் ஃபட்னவீஸ் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பல்காரில் உள்ள துலிஞ்ச் காவல்நிலையத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு, ஷ்ரத்தா வாக்கர், அஃப்தாப் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகார் கொடுத்துள்ளார். 

காவல்நிலையத்தில் ஷ்ரத்தா அளித்த கடிதத்தை தான் பார்த்ததாகவும், அதில் மிக மோசமான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அப்போது ஏன் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தற்போது விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்டுவது எனது நோக்கமல்ல, ஒரு வேளை புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருக்காது என்று ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர காவல்துறையினர் கூறுகையில், 2020ஆம் ஆண்டு ஷ்ரத்தா புகார் அளித்த போது நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். ஆனால் ஒரு சில நாள்களிலேயே தனது புகாரை திரும்பப்பெறுவதாக ஷ்ரத்தா எழுத்துப்பூர்வமாக மனு அளித்ததால் விசாரணையை நிறுத்தியதாகக் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT