இந்தியா

தில்லி கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: அமித் ஷா

DIN

தில்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு தில்லி காவல் துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நான் இந்த வழக்கு முழுவதையும் கவனித்து வருகிறேன். இந்த கொலை வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு குறுகிய காலத்தில் கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவேன். தில்லி மற்றும் மும்பை காவல் துறைக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு உள்ளது. ஆனால், மும்பை காவல் துறையில் ஷ்ரத்தா அளித்த புகாரில் தில்லி காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியாது.

மகாராஷ்டிர காவல் நிலையத்தில் ஷ்ரத்தா, அஃப்தாப் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், துண்டு துண்டாக வெட்டிவிடுவார் எனவும் புகார் அளித்துள்ளார். அப்போது அவரது புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் மகாராஷ்டிரத்தில் எங்களுடைய ஆட்சி இல்லை. இந்த கொலைக்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT