இந்தியா

திகார் சிறையில் தில்லி அமைச்சர்: மேலும் சில விடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி!

திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

DIN

திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். 

இந்த நிலையில், திகாா் சிறையில் உள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவர் தொடர்பான மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அதில் சிலர்  சத்யேந்தர் ஜெயின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது போலவும் இறுதியாக திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமாரும் வந்து அமைச்சரிடம் பேசுவது போல காட்சிகள் பதிவாகியுள்ளன. இம்மாத தொடக்கத்தில் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT