முகப்பு
இந்தியா

உ..பி.யில் பேருந்து-லாரி மோதல்: 6 பேர் பலி, 15 பேர் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:59 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. ஜெய்ப்பூரில் இருந்து வந்த பேருந்து பஹ்ரைச் சென்றுகொண்டிருந்தபோது, தவறான திசையில் வந்த லாரி மோதியது. 

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடுத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். 

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →