இந்தியா

பணியைத் தொடங்கியது இஓஎஸ்-6 செயற்கைக்கோள்!

DIN

பெங்களூரு: பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் இஓஎஸ்-06 உள்ளிட்ட 9 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து புவி கண்காணிப்பு, கடலாய்வு செயல்பாடுகளுக்காக, அதிநவீன ஓஷன்சாட்-3 (இஓஎஸ்-06) செயற்கைக்கோள் தற்போது படங்களை அனுப்ப தொடங்கியுள்ளது என்று தேசிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிநவீன ஓஷன்சாட்-3 (இஓஎஸ்-06) செயற்கைக்கோள் தற்போது இமயமலைப் பகுதி, குஜராத்தின் கட்ச் பகுதி மற்றும் அரபிக்கடலை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலம் ஆகிய படங்களை அனுப்பி வருகிறது.

யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் எம். சங்கரன் மற்றும் என்ஆர்எஸ்சி இயக்குநர் பிரகாஷ் சவுகான் ஆகியோர் முன்னிலையில் இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் விர்ச்சுவல் முறையில் இந்தப் படங்களை இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT